ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (11:02 IST)

விக்ரம் பா ரஞ்சித் கூட்டணியில் இணைந்த இளையராஜா!

இளம் இயக்குனர்கள் இப்போது அதிகளவில் இளையராஜாவை தேடி செல்ல ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளையராஜா அளவுக்கு புகழின் உச்சியை தொட்டவர்கள் யாரும் இல்லை. 80 கள் மற்றும் 90களில் ரஜினி கமலின் பெயருக்கு என்ன சந்தை மதிப்பு இருந்ததோ அதே அளவுக்கு இளையராஜா பெயர் போஸ்டரில் இருந்தால் அந்த படம் விற்பனையாகிவிடும் அளவுக்கு உச்சத்தில் இருந்தார்.

ஆனால் 90களின் மத்தியில் ரஹ்மான் வரவுக்குப் பின்னர் அவரின் புகழ் சரியத்தொடங்கியது. ரசிகர்களும் ரஹ்மான், வித்யாசாஹர், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் இசையை அதிகம் விரும்பிக் கேட்க ஆரம்பித்தனர். ஆனாலும் அவ்வப்போது ஹிட் பாடல்களை தந்துகொண்டும் பிஸியாகவும்தான் இருந்தார் இளையராஜா.

இந்நிலையில் இப்போது மீண்டும் இளையராஜாவை தேடி இளம் மற்றும் வெற்றிப்பட இயக்குனர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். மிஷ்கின், வெற்றிமாறன் வரிசையில் பா ரஞ்சித் அடுத்து விக்ரம்மை வைத்து இயக்கும் படத்துக்கு இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.