1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (09:41 IST)

பா ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அப்டேட்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா ஆகியவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான தென்மா இசையமைக்கிறார். வழக்கமாக ரஞ்சித் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பேசப்படும். இந்த முறை நட்சத்திரம் நகர்கிறது படம் முழுக்க முழுக்க காதலை பேச உள்ளதாக பா ரஞ்சித் கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் சாதி ரீதியான ஒடுக்குதலால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் ரோஹித் வெமுலாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான வித்தியாசமான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.