1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:25 IST)

பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ”J பேபி” … அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

பா ரஞ்சித் தயாரிப்பில் அட்டக்கத்தி தினேஷ், ஊர்வசி மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடிப்பில் ஜெ பேபி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது நீலம் புரொடக்‌ஷன் அடுத்து தயாரிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு J பேபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது அந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் தினேஷ் மற்றும் மாறன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.