1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (11:35 IST)

இன்று வெளியாகிறது பா ரஞ்சித்தின் அடுத்த பட அப்டேட் !

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 

இப்போது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாருஇத்து வரும் நிலையில் தங்களது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.