திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (16:25 IST)

சன் பிக்சர்ஸோடு இணையும் சீயான் விக்ரம்… இயக்குனர் லிஸ்ட் இதுதான்!

விக்ரம் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் மற்றும் கோப்ரா ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாரான நிலையில் உள்ளன. இதில் துருவ நட்சத்திரம் படம் மட்டுமே சில நாட்கள் படப்பிடிப்பை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது.  இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லபடுகிறது. ஆனால் பா ரஞ்சித் பிர்சா முண்டா வாழ்க்கை வரலாறை இயக்க உள்ளதால் விரைவில் இந்த படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் விக்ரம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை இயக்க பாண்டிராஜ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.