1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிறித்துவம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (22:30 IST)

நாளை புனித வெள்ளி!

Jesus
இந்த உலகில் அதிகளவில் மக்கள் பின்பற்றப்படும் மார்க்கமாக கிரிஸ்தவ மார்க்கம் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிறந்து, சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்துவைப் பின்பற்றப்படுவர்களால் நம்பப்படுகிறது.

அதன்படி, கிறிஸ்தவர்கள் வாழ்வில் தவக் காலம் முக்கியமான காலக்கட்டம் ஆகும். இதை புனிதவாரம் என்று அழைப்பார்கள்.

இயேசு நாளை சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள், கெத்சமாஎ தோட்டத்தில், இரவில், தேவனிடம் கண்ணீருடன் ஜெபித்தார். இதுதான் பெரிய  வியாழக்கிழமை என்று அழைக்கப்படுகிறது.

இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டட நிகழ்வை நினைவ்கூறும் வகையில், புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 நாளை காலையில், டி.இ.எல்.சி. சி.எஸ்.ஐ,ஆர்.சி உள்ளிட்ட அனைத்து திருச்சபைகளிலும் புனித வெள்ளி ஆராதனை நடைபெறும்.