என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் பாட்டில் ராதா என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தினகரன் சிவலிங்கம் என்பவர் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டீசரில் குடிகாரர்கள் தங்களது நிலைமையை எடுத்துச் சொல்லும் காட்சிகளை கொண்ட படமாக அமைந்துள்ளது.
ஊர் முழுவதும் டாஸ்மாக்கை திறந்துவிட்டு குடிக்காதே என்று சொன்னால் எப்படி என்றும் நான் சம்பாதித்த காசில் நான் குடிக்கிறேன், என்னை குடிக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று கூறும் வசனம் உள்ளன
மேலும் இனிமேல் குடித்தால் தாலியை கழட்டி வீசிவிட்டு குழந்தைகள் உடன் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று மனைவி பயமுறுத்தும் கூட, ஒரு கட்டிங் போட்டுவிட்டு இது குறித்து யோசிக்கலாம் என்று அசால்ட்டாக குரு சோமசுந்தரம் கூறும் வசனமும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது
மொத்தத்தில் குடியின் தீமையினால் ஒரு குடும்பம் எப்படி அழிகிறது என்பதை மிகவும் உணர்ச்சி வசமாக இந்த படத்தை எடுத்து இருப்பார் என்பது புரிய வருகிறது. இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Edited by Mahendran