வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 ஜூன் 2024 (15:47 IST)

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல ஹீரோ!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படம் ஜூலை மாதத்தில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ‘வேட்டுவம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.