ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (19:28 IST)

நீண்ட இடைவெளிக்கு பி வாசு மகன் சக்தி நடிக்கும் படம்: டைட்டில் அறிவிப்பு!

நீண்ட இடைவெளிக்கு பி வாசு மகன் சக்தி நடிக்கும் படம்: டைட்டில் அறிவிப்பு!
பிரபல இயக்குநர் பி வாசுவின் மகன் ஷக்தி கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் 
 
அதன் பின்னர் நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன், ஏதோ செய்தாய் என்னை, தற்காப்பு, உள்பட சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் அவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவருக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு படம் கிடைத்துள்ளது 
 
இந்த படத்தின் டைட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சக்திவாசு வித்தியாசமான கெட்டப்பில் வாயில் சுருட்டுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது