முதல்வன் 2 படத்தில் அஜித்… கொளுத்தி போட்ட இணையவாசி !
இயக்குனர் ஷங்கர் இயக்கி 1999 ஆம் ஆண்டு வெளியான முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் நடிக்க உள்ளதாக வதந்தி சமூகவலைதளத்தில் பரவியுள்ளது.
1999 ஆம் ஆண்டு அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் முதல்வன். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும் அதில் கதாநாயகனாக நடிக்க அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என்று சொல்லப்படுகிறது. ஷங்கர் இப்போது இந்தியன் 2 மற்றும் தனது அடுத்த ஒரு படம் ஆகிய இரண்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.