திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (18:22 IST)

ட்விட்டருக்கு திரும்பிய ஓவியா; உற்சாக வரவேற்பில் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா சென்றுவிட்டதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை மறுத்துள்ளார் ஓவியா.

 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்திலிருந்தே கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல், வெளிப்படையாக பேசிக்கொண்டும், எப்போதும் சிரித்தபடி  இருந்த அவரை பலருக்கும் பிடித்துப் போனதற்கு காரணம்.
 
ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமடைந்துவிட்டார். ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.  இந்நிலையில் இவர் கடைசியாக டுவிட்டர் வந்தது ஜுன் 22ம் தேதி தான், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று  டுவிட்டருக்கு திரும்புயுள்ளார்.

 
வந்ததுமே முதல் டுவிட்டாக “எல்லோருக்கும் நன்றி மிகவும் சந்தோஷமாக உள்ளது” என தெரிவித்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.