வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (16:12 IST)

இந்த கோபத்தை பாதுகாத்து வையுங்கள்; அதற்கான காலம் விரைவில் வரும் - கமல் ஆவேசம்

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் அழைத்து கலந்துரையாடினார் கமல். அதில் ஆர்த்தி, ஜுலி, பரணி, சக்தி, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரிடமும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு எப்படி இருக்கிறீர்கள் என அவர்களுடைய அனுபவத்தைக் கேட்டறிந்தார்.

 
அப்போது பேசிய ஜுலி, வெளியில் சென்றபோது எங்க வீட்டுப் பெண்ணா நினைச்சிதானேம்மா உன்னை அனுப்பனோம், நீ போய் பொய் சொல்லிட்டியேம்மான்னு மக்கள் கேட்ட வார்த்தை,” என்றார். அவருடைய பேச்சுக்கு பார்வையாளரிடமிருந்து எதிர்ப்புகுரல் எழுந்தது. அவருக்குப் பதிலளித்து பேசிய கமல், இவ்வளவு கோபப்பட வேண்டிய அவசியமே கிடையாது. ஒரு சின்ன  விஷயத்துக்காக பொய் சொன்னாங்க.
 
அப்படின்னா அரசியல்வாதிங்களை எல்லாம் ஏன் விட்டு வச்சீங்க. இவ்வளவு கோபம் ஒரு சின்ன பெண் மேல காட்றீங்களே.  குண்டர் சட்டத்துல உள்ள போக வேண்டியவங்க எல்லாம் நம்ம மேல அதை பாய்ச்சிக்கிட்டிருக்காங்களே. இந்த கோபத்தை  பாதுகாத்து வையுங்கள். அதை வெளிக் கொண்டு வரவேண்டிய காலம் விரைவில் வரும். 
 
நியாயமான நேரத்துல எதிர்த்துப் பேசுங்க, கோபத்தையெல்லாம் ஜுலி பேர்லயும், காயத்ரி பேர்லயும் வீணடிச்சிடாதீங்க. அதை சரியான நேரத்துல, சரியான பாதையில பயன்படுத்துங்கள்” என ஆவேசமாகப் பேசினார்.