புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (12:54 IST)

பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் ஆரவ்வை வம்புக்கிழுத்த ஆர்த்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இதற்கு முன்பு போன பிரபலங்கள் சிலர் மீண்டும் நிகழ்ச்சியில் நுழைய இருப்பதாக கூறினார். இந்நிலையில் தற்போது ஜூலி மற்றும் ஆர்த்தி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 
புதிதாக வந்த புரொமோவில் ஜுலி மற்றும் ஆர்த்தி நிகழ்ச்சியில் நுழைந்து பிக்பாஸ் வீட்டில் வாசல் வழியாக ஜூலியும், கலந்தாலோசிக்கும் அறை வழியாக ஆர்த்தியும் உள்ளே நுழைகின்றனர். ஆர்த்தியின் எண்ட்ரியை பார்த்த சிநேகன், இந்த  வழியாக இதுவரை யாரும் வந்ததில்லை. அந்த பெருமை உங்களையே சேரும் என கூறுகிறார். உடனேயே ஆர்த்தி, ஆரவ்வை பார்த்து இத நீங்க எதிர்பார்க்கல இல்லையா? வேற யாரையோ எதிர்பார்த்த மாதிரி தெரியுது என்று கேள்வி கேட்டு வம்பிழுக்கிறார். ஜூலி பாத்ரூமில் ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன் என்று பாட்டு பாடி கொண்டே நடனம் ஆடுகிறார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக வந்த பிரபலங்கள், இப்போதுள்ள பழைய போட்டியாளர்களுடன் சேர்ந்துள்ளனர். இதனால் பல  பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இனி வரும் நிகழ்ச்சிகளில் என்ன நடக்கிறது என்பதனை பொருந்திருந்து பார்ப்போம்.