வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (17:05 IST)

ஆடையில் வியர்வை; கேலி செய்த ரசிகர்: மிதாலி பதிலடி!!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தன்னை கேலி செய்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


 
 
மிதாலி ராஜ் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில், சக கிரிக்கெட் வீராங்கனைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.
 
அந்த புதைப்படத்தை பார்த்த ஒருவர், உங்களது ஆடையில் வியர்த்து உள்ளது, இது உங்களுக்கு சங்கடமாக இல்லையா என கேலி செய்துள்ளார்.
 
இதை பார்த்த மிதாலி, ஆம் எனக்கு வியர்த்து இருக்கிறது. அதனால் எனக்கு சங்கடம் இல்லை. நான் உழைக்கும் போது வந்த இந்த வியர்வை தான் என்னை உயர்த்தியது என பதிலடி கொடுத்துள்ளார்.