வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (22:19 IST)

நெட்பிளிக்ஸில் வெளியான 6 படங்களுக்கு ஆஸ்கர்

93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழ பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா  இரண்டாம் அலை பரவலானதால் இவ்விழா ஒத்திவைக்கப்பட்டது.

எனவே இரு மாதங்கள் கழித்து இவ்விழா  இணையம் வழிகாக நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யூனியன் ஸ்டேசன், டால்பி திரையரங்கம் ஆகிய இடங்களில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்குப் நாமினேஷன் ஆனவர்கள் நியூயார்க் மற்றும் லண்டனில் அமைக்கப்பட்ட  அரங்கில் கலந்துகொண்டனர்.

நெட்பிளிக்ஸில் வெளியான 6 படங்கள் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவுக்காக -மான்க் திரைப்படமும், சிறந்த அனிமேஷனுக்காக -இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ படமும், சிறந்த குறும்படமாக – டூ டிஸ்டண்ட் ஸ்டிரேஞ்சர்ஸ் படமும், சிறந்த ஆவணப்படமாக – மை ஆக்டோபஸ் டீச்சர் படமும் – சிறந்த ஆடை வடிவமைப்புக்காக மா ரைனிஸ் பிளாக் பாட்டம் படமும், சிறந்த ஒப்பனைக்காக – மா ரைனிங் பிளாக் பட்டம் படமும் வென்றுள்ளது.