1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (15:52 IST)

18+ ப்ளஸ் படமா ஜகமே தந்திரம்? நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!

ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் 18+ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. ஆனால் இதில் படத்தின் கதாநாயகன் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருக்கு சம்மதம் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளரோடு கருத்து மோதலில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டும் பார்க்கும் படம் என்ற வகையில் வைத்துள்ளதாம் நெட்பிளிக்ஸ். ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.