திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 7 மார்ச் 2021 (16:05 IST)

நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமலா பால்!

நடிகை அமலா பால் நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியான whats next india 2021 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

உலகளவில் ஓடிடி தளங்களுக்கான பார்வையாளர்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனாவிற்குப் பின் நெட்பிளிக்ஸ் அதிகளவில் முதலீடுகளை செய்துவருகிறது. இதன் ஒரு கட்டமாக whats next india 2021 எனும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள நடிகை அமலா பால் அழைக்கப்பட்டுள்ளார். இவர் நெட்பிளிக்ஸ் தொடரில் பிட்ட கதலு உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.