விஜய்யை மட்டும்தான் அப்படி அழைக்க தோன்றுகிறது- லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி
லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை பற்றி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு படத்திற்குப் பின் நடித்து வரும் படம் லியோ.
லோகேஷ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
சமீபத்தில், விஜய் குரலில், அனிருத் இசையமைப்பில், லியோ பட முதல் சிங்கில் நா ரெடிதான் என்ற பாடல் வெளியானது. இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதுபற்றி லோகேஷ் கனகராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதில்,ஒரு மாணவர், தளபதி விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் விஜய் பற்றி கூறுங்கள் என்று கேட்டார்.. இதற்குப் பதிலளித்த லோகேஷ்
''தளபதி பற்றி சொல்ல நிறைய இருக்கிறது., அதற்கு இந்த ஸ்டேஜ் பத்தாது. நான் பணியாற்றிய நடிகர்களை சார் என்றுதான் அழைத்திருக்கிறேன். உண்மையில் அண்ணா என்று கூப்பிடத் தோன்றியது விஜய்யை மட்டும்தான்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.