வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (08:59 IST)

அப்ப சந்தோஷமா இருந்துச்சு… இப்ப ? -விஜய் வீட்டில் ரெய்டு நடப்பதற்கு இவர்கள்தான் காரணம்!

பிகில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்

நடிகர் விஜய் வீடு மற்றும் பிகில் படத்தின் தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் ரெய்டு நடப்பதற்கு முக்கியக் காரணமாக போலியாக ஆன்லைனில் பிகில் படத்தின் வசூல் விவரங்களை வெளியிட்டவர்கள்தான் என சொல்லப்படுகிறது.

விஜய் வீட்டில் மற்றும் பிகில் படத்தின் தயாரிப்பாளர், பைனான்சியர் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வந்தனர் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் 300 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் திடீரென இப்போது ஏன் விஜய் மற்றும் அவர் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது என்பதற்கு முக்கியமானக் காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. பிகில் பட ரிலிஸீன் போது படத்தின் வசூல் 200 கோடி , 300 கோடி என அறிவித்து ரசிகர்களை சிலிர்க்க வைத்தார்கள் சில ஆன்லைன் டிராக்கர்ஸ். ஆனால் அந்த வசூல் நிலவரம் உண்மையா என்றேல்லாம் யாரும் கவலைப்படவில்லை. இதுபோன்ற டிராக்கர்ஸ்களுக்கு தயாரிப்பு நிறுவனமும் காசு கொடுத்து ஊக்குவித்ததாக அப்போது சொல்லப்பட்டது.

ரெய்டின் போது இதை அடிப்படையாக வைத்தே அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது. அதனால் இது ஆன்லைன் டிராக்கர்ஸ்களால் வந்த வினை என சொல்லப்படுகிறது.