வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (08:43 IST)

வரி ஏய்ப்பா? பிகில் வசூலா? அந்த 300 கோடி எதை குறிக்கிறது?

அந்த 300 கோடி எதை குறிக்கிறது?
விஜய் வீட்டில் மற்றும் பிகில் படத்தின் தயாரிப்பாளர், பைனான்சியர் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வந்தனர் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் 300 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும் அறிவித்திருந்தது
 
ஆனால் இந்த வருமானவரித் துறையின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 300 கோடியை பிகில் படத்தின் வசூல் என விஜய் ரசிகர்களும் நெட்டிசன்கள் சிலரும் பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
 
சென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி சொத்து ஆவணங்கள், பின் தேதியிட்ட காசோலைகளை உள்பட 300 கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த வரி ஏய்ப்பு தொகையை பிகில் படத்தின் வசூல் என தவறாக புரிந்து கொண்டு விஜய் ரசிகர்களும் ஒரு சிலரும் டுவிட்டுக்களை பதிவு செய்து வருவதாக விபரம் அறிந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்