1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (17:57 IST)

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்தது யோகம்: விஜய்சேதுபதி படத்தில் இணைந்தார்!

உலகநாயகன் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் டைட்டில் வின்னர் ஆக தேர்வு பெற்றவர் நடிகை ரித்விகா என்பது தெரிந்ததே. டைட்டில் வின்னராக தேர்வு பெற்ற பின்னும் அவருக்கு பெரிய படங்களில் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. பா. ரஞ்சித் இயக்கிய ’குண்டு’ என்ற படத்தில் மட்டும் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அவருக்கு மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தாலும் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
 
இந்த படத்தில் ஏற்கனவே மேகாஆகாஷ் நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் ரித்விகாவும் இணைந்துள்ளார். இவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் என்றும் இந்த படத்தின் கதையே இவரது கேரக்டரை மையமாக வைத்துதான் உள்ளது என்றும் கூறப்படுகிறது
 
விஜய்சேதுபதியுடன் முதல் முதலாக ரித்விகா இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ரித்விகா கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது வெங்கடகிருஷ்ண ரோக்நாத் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து வருகிறார்