1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (17:54 IST)

’ஓ சொல்றியா மாமா’ பாடல் நடன இயக்குனர் மீது பாலியல் வழக்கு!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடல் பெரிய வைரலானது என்பது தெரிந்ததே 
 
சமந்தா ஆடிய இந்த குத்துப் பாட்டுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் மீதும் இவரது உதவியாளர் மீது பாலியல் புகார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
இவரது நடன குழுவில் இருந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 தன் மீதான புகாரை மறுத்துள்ள நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா இந்த பிரச்சனையை சட்டத்தின் மூலம் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.