செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 16 டிசம்பர் 2017 (15:27 IST)

நிர்வாண புகைப்படம் அனுப்ப சொன்ன சீரியல் குழு அதிகாரி; பிரபல தொகுப்பாளினி அதிர்ச்சி தகவல்

`சமையல் மந்திரம்' நிகழ்ச்சி மூலம் இளசுகளைச் சுண்டி இழுத்து, சின்னத்திரைத் தொடர்கள் வழியே மக்கள் மனங்களில் நிறைந்தவர் நடிகை திவ்யா. இவர், தற்போது `வம்சம்', `மரகதவீணை' போன்ற தொடர்களில் தன் நடிப்புத்திறனை  வெளிப்படுத்திவருகிறார்.  
இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி திவ்யா தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசுகையில்,  சினிமாவில் இருக்கும் பெண்களுக்கும் நிறைய பிரச்சனைகள் வருகின்றன. சமீபகாலமாக நடிகைகள் பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைகள் அனுபவித்ததாக கூறிவருகின்றனர். அதில் நான் அப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிறகு எனக்கு  நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது. 
 
ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அடுத்த நாள் நடிக்க போகும்போது,  சீரியல் குழு அதிகாரி ஒருவர் இரவு என்னை அரைகுறை ஆடை புகைப்படம், ஆடையில்லா புகைப்படம் அனுப்புங்கள் என்று கேட்டார். அதிர்ச்சியடைந்த நான் அந்த நேரம் பயப்படாமல் அவரை எதிர்த்து கேள்விகள் கேட்டதால் அவர் இறுதியில் மன்னிப்பு  கேட்டதாக கூறியுள்ளார்.