1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2017 (16:12 IST)

தாய்லாந்து கோயிலில் நிர்வாண படம் எடுத்த அமெரிக்க சுற்றுலா பயணிகள்

தாய்லாந்து நாட்டின் பாங்காக் கோயிலில் நிர்வாண புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்ட அமெரிக்க சுற்றுலா பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
தாய்லாந்து நட்டிற்கு சுற்றுலா சென்ற அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவர் பாங்காக்கில் உள்ள வாட் அருண் கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் தங்களை நிர்வாண படம் எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டில் புத்த மதத்திற்கு அவமரியாதை செய்யும் வகையில் எதுவும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டங்கள் உள்ளது.
 
இந்நிலையில் குடிஅமர்வு அதிகாரிகள் அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரையும் கைது செய்தனர். சுற்றுலா பயணம் முடிந்து தாய்லாந்து நாட்டைவிட்டு வெளியேற இருந்த இருவரும் பாங்காக்கில் உள்ள டான் மியூங் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் அபராதம் விதிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என குடிஅமர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.