வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (12:49 IST)

இனி டாப் ஸ்டார் ஆக்‌ஷன் ஆரம்பம்.. ஆகஸ்டில் வெளியாகிறது அந்தகன்! - ரசிகர்கள் குஷி!

Andhagan

நடிகர் ப்ரஷாந்த் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த அந்தகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

 

 

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்து ஹிட்டான படம் அந்தாதுன். இந்த படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ப்ரஷாந்த் நடிக்க படமாக எடுக்கத் தொடங்கினார்கள். ஆனால் படம் தொடங்கியது முதல் பல சிக்கல்கள். முதலில் இயக்கிய இயக்குனர் ஆரம்பத்திலேயே வெளியேறிய நிலையில் படத்தின் இயக்குனராக பிரசாந்தின் தந்தை தியாகராஜனே களம் இறங்கினார்.

 

பின்னர் கொரோனா காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. பல இக்கட்டான சூழல்களையும் தாண்டி தற்போது அந்தகன் திரைப்படம் முழுவதுமாக தயாராகியுள்ளது. சமீபத்தில் அந்தகன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு நடந்து முடிந்தது. இந்த படத்தில் ப்ரஷாந்துடன் சிம்ரன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

நீண்ட காலமாக டாப் ஸ்டார் ப்ரஷாந்தின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படம் ஆகஸ்டு 9ம் தேதி வெளியாவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது டாப் ஸ்டார் பிரசாந்துக்கு பெரிய கம்பேக்காக இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K