புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (10:55 IST)

பிரான்சில் இதுவரை இப்படி யாரும் செஞ்சதில்லை: தல ரசிகர்கள் செய்த சூப்பர் விஷயம்!

விஸ்வாசம் திருவிழா, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி தொடங்குகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.


 
விவேகம் படத்துக்கு பிறகு கடந்த ஓராண்டாக புதிய படம் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இப்போது விஸ்வாசம் வெளியாக உள்ளதால் தல ரசிகர்கள் குஷியாக உள்ளனர். பொங்கல் திருவிழாவுடன் விஸ்வாசம் திருவிழாவையும் சேர்த்து கொண்டாட தயாராகி வருகின்றனர்.
 
இதற்காக தமிழகம் முழுவதும் அஜித்துககு கட் அவுட் வைத்து வருகின்றனர்.இந்நிலையில் பிரான்சின் முக்கிய நகரில்  அஜித்துக்கு அவரது ரசிகர்கள் மிகப்பபெரிய கட்அவுட் வைத்துள்ளனர். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்த நடிகருக்கும் இவ்வளவு பெரிய கட் அவுட் பிரான்சில் வைக்கப்படதில்லையாம். இதை கேள்விப்பட்டு தல ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.