திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (17:50 IST)

சந்தானத்தின் ''குலுகுலு'' பட முதல் பாடல் ரிலீஸ் ! இணையதளத்தில் வைரல்

kulu kulu
சந்தானம் நடித்த ‘குலுகுலு’ என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘குலுகுலு’ படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பித்துவிட்ட நிலையில் முதல் கட்டமாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் சுமார் 2 நிமிடம் உள்ள நிலையில் இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மட்டும் காமெடி காட்சிகளும் இடம்பெற்றன.  இது ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

தாடி கெட்டப்பில்,சந்தானத்தின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை ஆடை ரத்தின குமார் இயக்கியுள்ளார் என்பதும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் .

இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மாட்னா காலி என்ற இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடி, இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.