செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (12:06 IST)

விவேகம் போல் பாலிவுட்டில் பிரமிப்பு இல்லை; சஞ்சய் தத் வருத்தம்

விவேகம், பாகுபலி போல் பிரமிப்பூட்டும் வகையில் தற்போது பாலிவுட் படங்கள் எடுப்பதில்லை என பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.


 

 
மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சிறை சென்று சில மாதங்களுக்கு முன் வெளியே வந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள பூமி என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்காக அவர் படத்தை புரமோட் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சஞ்சய் தத் கூறியதாவது:-
 
சினிமாத்துறையில் ஒரு படத்தின் வெற்றி 3 அல்லது 4 நாட்களில் முடிவு செய்யப்படும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வெற்றி, தோல்வி என்பது முற்றிலும் மாறிவிட்டது.
 
தமிழ், தெலுங்கு திரையுலகினரைப் போல் பிரமிப்பூட்டும் படங்களை பாலிவுட்டினர் தயாரிப்பதில்லை. அஜித்தின் விவேகம், பாகுபலி போன்ற படங்கள் மிகவும் பிரமிப்பாக இருந்தன என்றார்.