வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (17:48 IST)

பாகுபலி போல் ஆந்திராவின் தலைநகர் - ராஜமௌலியிடம் ஆலோசனை கேட்ட முதல்வர்

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடு, சினிமா இயக்குனர் ராஜமௌலியிடம் ஆலோசனை கேட்ட விபரம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாடு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளார்.
 
எனவே அமராவதி, பாகுபலி படத்தில் காட்டப்பட்ட பிரமாண்ட அரண்மனை போன்று இருக்க வேண்டும் என விரும்பிய சந்திரபாபு நாயுடு, இயக்குனர் ராஜமௌலியை நேரில் அழைத்து சில ஆலோசனைகள் கேட்டாராம். அவரும் சில ஆலோசனைகளை கூறிவிட்டு வந்திருக்கிறார்.
 
அமராவதி தலைநகரை வடிவமைக்கும் பணியை முதலில் ஜப்பான் நிறுவனத்திடம் கொடுத்திருந்தார் சந்திரபாபு நாயுடு. ஆனால், அவர்களின் வடிவமைப்பு அவருக்கு பிடிக்காததால், தற்போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நாரிமன் பாஸ்டர் என்றா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.


 

 
அந்நிலையில் அமராவதி நகரத்துக்கான வடிவமைப்புகளை சந்திரபாபு நாயுடுவிடம் அந்த நிறுவனம் ஒப்படைத்தது. ஆனால், அதிலும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. தலைநகரின் வெளித்தோற்றம் பாகுபலி படத்தின் அரண்மனை போல இருக்கு வேண்டும் என சந்திரபாபு நாயுடு விரும்புகிறாராம்.
 
எனவே, ராஜமௌலியிடம் மீண்டும் அழைத்து ஆலோசனை கேட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம். ராஜமௌலி சம்மதித்தால், அவரது தலைமையில் அதிகாரிகளின் குழுவை லண்டனுக்கு அனுப்பி, நாரிமன் பாஸ்டர் நிறுவனத்தினரிடம் நேரில் சென்று ஆலோசிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.