வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:39 IST)

ஓ மை காட்! ஃபுல் சரக்குல மரண ஆட்டம் போட்ட நிவேதா தாமஸ் - வைரல் வீடியோ

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக "தர்பார்" படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்தார்.

இப்படி தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் குடும்ப பெண் தோற்றத்தில் நடித்து பேமஸ் ஆன நிவேதா தாமஸ் தற்ப்போது அதற்கு எதிர்மறையாக "V" என்ற தெலுங்கு த்ரில்லர் படத்தில்  "பேபி டச் மீ" என்ற பாடலுக்கு சரக்கு அடித்துக்கொண்டு காட்டுத்தனமாக நடனமாடி நிவேதாவா இது என வாய்பிளக்க வைத்துட்டார். இந்த வீடியோ தற்போது சூப்பர் வைரலாகி வருகிறது.