1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:37 IST)

யாரு நீங்க எங்க கருப்பு நிஷா எங்க? போய் அவங்கள வர சொல்லுங்க - அறந்தாங்கி நிஷாவே தான் இது!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவர் தனது அதனை மகன் ரியாஸ் அலி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருகிறார்கள். குடும்பம் குழந்தை என பல கடமைகள் இருந்தாலும் அதிலும் தனது லட்சியம் கனவுளை நோக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார் நிஷா.

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கினாள் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து தற்ப்போது மீண்டும் துவங்கியுள்ளது. அதற்காக நிகழ்ச்சி ஒன்றிற்கு மேக்கப் போட்டுக்கொண்டு ரெடி ஆகி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். பட்டி பார்த்து டிங்கரிங் செய்தது போன்று செம கலரில் இருக்கும் நிஷாவை பார்த்து ரசிகர் ஒருவர் "அக்கா இவ்வளவு நிறம் இல்லையே.. எங்கயோ தப்பு நடந்துள்ளது. " என கமெண்ட் செய்துள்ளார். உண்மையிலே நிஷா உங்களது ஒரிஜினல் கலர் தான் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது அப்படியே இருங்கள் அது தான் உங்களது தனித்துவம் ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Shoot time

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on