வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (22:34 IST)

மனவருத்ததால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய நிவேதா பெத்துராஜ்

டுவிட்டரில் ஆக்டிவாக இருந்து வந்த நிவேதா பெத்துராஜ் தவறான மெசேஜ்கள் மற்றும் அநாகரிகமான ரிப்ளைகளால் மனவருத்தம் அடைந்து டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.

 
ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டி படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளமான டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ஆக்டிவாக இருந்தவர்.
 
தற்போது இவர் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தவறான மெசேஜ்கள் மற்றும் அநாகரிகமான ரிப்ளைகள் வந்ததால் மனவருத்தம் அடைந்து தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.