நடிகை கஸ்தூரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
சாதி கலவரத்தை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகள் பதிவு செய்வதாக நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரி சமீப காலமாக சினிமா, அரசியல் என பல்வேறு விஷயங்களை கோபமாகவும், கிண்டலாகவும், கேலியாகவும் டுவிட்டரில் கருத்து பதிவு செய்து வருகிறார். இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமமாக எழுந்து வருகிறது.
இவர் சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மறைவின் போது ”அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மறைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒருநாள் சன்னிலியோன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என கவலைப்படுகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். இதனால் பலர் அவரின் கருத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில்,நடிகை கஸ்தூரி சாதி கலவரத்தை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகள் பதிவு செய்வதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக நீதி சத்ரிய பேரவையின் தலைவர் பொன்குமார் புகார் கொடுத்துள்ளார்.