செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 4 மே 2020 (13:56 IST)

என் பேர்ல நிறைய ஃபேக் ஐடி இருக்கு - வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!

'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.  தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த " அல வைகுந்தபுரமுலோ " படத்தின் முக்கிய ரோலில் நடித்து புகழ்பெற்றார்.  இவர் 2018 ஆண்டிலிருந்தே ட்விட்டர் அக்கவுண்ட் உபயோகிப்பதை நிறுத்திவிட்டார். அதன் பின்னர் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்ட்டிவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாத தொடக்கத்தில் மீண்டும் ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்து  ஆக்ட்டிவாக இருந்துவருகிறார். இது குறித்து கூறிய அவர், தனது பெயரில் நிறைய ஃபேக் ஐடி இருப்பதால்  verified அக்கவுண்ட் ஆக முடியவில்லை என்று கூறி விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். எனவே இது தான் நிவேதா பெத்துராஜின் ஒரிஜினல் ஐடி அவரது ரசிகர்கள் இதை ஃபாலோ பண்ணுங்க..