"தாராள பிரபு" படம் பார்க்கும் போது உங்களுக்கு மூக்கு வழியா வந்திடும் - எதை சொல்லுறாங்க யாஷிகா...?

Papiksha Joseph| Last Updated: வியாழன், 16 ஏப்ரல் 2020 (17:49 IST)

பாலிவுட்டின் முக்கிய வளரும் நட்சத்திரமாக வலம் வரும் ஆயுஸ்மான் குர்ரானா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் விக்கி டோனர். விந்து தான விழிப்புணர்வு பற்றிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு விருதுகளையும் வாரி குவித்தது.

இதையடுத்து இந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யும் ஆர்வம் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் அதிகரித்தது. அந்தவகையில் தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக தடம் படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்துள்ளார். இப்படம் வெளியாகவிருந்த நேரத்தில் தான் கொரோனா வைரஸ் பாதித்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, மீண்டும் ‘தாராள பிரபு’ ரிலீஸ் செய்யப்படுமாம்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை‘அமேசான் ப்ரைம்’-ல் பார்த்த நடிகை யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "நான் படத்தை பார்த்துவிட்டேன். படம் நன்றாக இருந்தது. ஆனால் ஒரு கண்டீஷன் நீங்கள் இந்த படத்தை பார்க்கும்போது எதையும் குடித்துக்கொண்டே பார்க்கக்கூடாது. மீறி குடித்தால் அது மூக்கு வழியே வந்துவிடும்... படம் அந்த அளவிற்கு காமெடியாக இருக்கிறது என கூறி பதிவிட்டுள்ளார். நம்ம ஆட்கள் அவர் சொன்ன கருத்தை குதர்க்கமாக எடுத்துக்கொண்டு கிண்டலடித்து வருகின்றனர். படம் அப்படி வேற என்னத்த சொல்ல.....!


இதில் மேலும் படிக்கவும் :