1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 27 ஜனவரி 2018 (15:12 IST)

நடிகர் நானிக்கு படப்பிடிப்பில் காயம்

தெலுங்கு நடிகரான நானிக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பிரபல தெலுங்கு நடிகர் நானி. ராஜமெளலி இயக்கத்தில் தமிழில் ரிலீஸான ‘நான் ஈ’ படத்தில் நடித்திருந்தார். சாய் பல்லவி ஜோடியாக அவர் நடித்த ‘எம்சிஏ’ சமீபத்தில் வெளியானது.
 
தற்போது நானி ‘கிருஷ்ணார்ஜுன யுதம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கில், கார் விபத்து காட்சியில் நடிக்கும்போது நிஜமாகவே நானிக்கு அடிபட்டுவிட்டது. ஆனால், பெரிய காயம் எதுவுமில்லை.
 
சிராய்ப்புகளுடன் விபத்தில் இருந்து தப்பித்த நானி, ஓய்வெடுத்து வருகிறார். எனவே, படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் நானி  குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.