உண்மையும் இருக்கலாம் பொய்யும் இருக்கலாம்… கிசுகிசுக்கள் பற்றி நிதி அகர்வால்!
நடிகை நிதி அகர்வால் சிம்புவோடு காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிதி தனது வரிசையான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவும் இவரும் இப்போது காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்வரன் படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர்கள் இருவரும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். விரைவில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சிம்புவின் சினிமா சம்மந்தப்பட்ட முடிவுகளை கூட நிதி அகர்வால்தான் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தன்னைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு பதில் அளித்துள்ள நிதி அகர்வால் நம்மைப் பற்றி எப்போதும் ஏதாவது எழுதப்பட்டு கொண்டுதான் இருக்கும். அதில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். எது உண்மை என்று நம் பெற்றோருக்கு தெரிந்தால் போதும். மக்கள் பேசுவது எல்லாம் ஸ்கூலில் போடும் நாடகம் போன்றவைதான். நம் செய்யும் வேலைதான் அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும் எனக் கூறியுள்ளார்.