1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2017 (17:06 IST)

அடல்ட் ஃப்லிம் ஏன்? நிக்கி கல்ராணி பதில்!!

அறிமுக இயக்குனர் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் ஹரஹர மகாதேவகி. 


 
 
இந்த படம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய காமெடி படம். படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டேன் என நிக்கி கல்ராணி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, படத்தில் தப்பான காட்சிகள் இருக்காது. என்னுடைய எல்லா படத்தையும் போல இதுவும் நல்ல படம் தான். 
 
இந்த படம் ஒரு அடல்ட் காமெடி படம். படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் சூழ்நிலையேற்ப வரும். இந்த படத்தில் யாரையும் தப்பாக காட்டுவது போல் காட்சிகள் இல்லை. கதை பிடித்திருந்ததால் நான் நடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.