வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:54 IST)

என்.ஜி.கே:- சூர்யா ரசிகர்களை மகிழ வைக்கும் சூப்பர் அப்பேட்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நீண்ட நாட்களாக நடித்து வந்த என்ஜிகே ஒரு வழியாக இறுதி வடிவம் பெற்றுள்ளது.

 
வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு  என்ஜிகே படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
 
முழு அரசியல் படமான என்ஜிகேவில் சூர்யா நந்த கோபலான் குமாரன் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெகபதி பாபு இளவரசு, மற்றும் ராம்குமார் கணேசன் ஆகியோர் முக்கிய  வேடத்தில் நடித்துள்ளார்கள்.
 
 ஜனவரி மாதம் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
இந்நிலையில் டீசருக்கான டப்பிங்கை இப்போது சூர்யா முடித்துவிட்டார். இதனால் வரும் காதலர் தினத்தில் (பிப்.14) என்ஜிகே டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.