1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (14:47 IST)

இந்த வார ரிலீஸ்கள் எதுவும் ரசிகர்களைக் கவரவில்லை… இரண்டாவது வாரத்தில் கலக்கும் திருச்சிற்றம்பலம்!

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி இரண்டாவது வாரத்திலும் தொடர்கிறது.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி இரண்டாவது வாரத்திலும் கலக்கி வருகிறது. இந்த வாரம் ரிலீஸான படங்கள் எதுவும் ரசிகர்களைக் கவராததால் திருச்சிற்றம்பலம் படத்துக்கே ரசிகர்களின் ஆதரவு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.