தேன்மொழி.. பூங்கொடி..! பாடலால் அழ வைத்த திருமூர்த்தி! – வைரலாகும் வீடியோ!
தனுஷ் நடித்து வெளியான திருசிற்றம்பலம் படத்தின் “தேன்மொழி.. பூங்கொடி” பாடலை திருமூர்த்தி பாடியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
கண் பார்வையற்றவரான திருமூர்த்தி தனது வசீகரமான குரலால் திரையிசை பாடல்களை பாடி பலரையும் பிரமிக்க செய்து வருகிறார். இவரது திறமையை கண்ட இசையமைப்பாளர் டி.இமான் தான் இசையமைத்த ரஜினிகாந்த் படமான “அண்ணாத்த” படத்தில் ஒரு பாடலை பாட செய்தார்.
சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்திலிருந்து “பத்தல.. பத்தல..” பாடலை இவர் பாடியது ட்ரெண்டானது. அதை தொடர்ந்து திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் அவரை ஏ.ஆர்.ரகுமானின் இசை பள்ளியில் தன்னுடைய செலவில் சேர்த்துள்ளார்.
தற்போது அங்கு பயின்று வரும் திருமூர்த்தி திருச்சிற்றம்பலம் படத்தின் ”தேன்மொழி.. பூங்கொடி” பாடலை பாடியுள்ளார். காதல் தோல்வி பாடலான அந்த பாடலை திருமூர்த்தி பாடும் விதம் கண்டு பலரும் உருகி போயுள்ளனர்.