வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (21:29 IST)

சக்ரா படத்தின் டீசர் ரிலீஸ்….’’அம்மா பாடல்’’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் பிலிம்பேக்டரி சார்பில் தயாரித்து விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. இப்படத்தின் டீசர் தற்போது ரிலீசாகியுள்ளது.

விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலில் செய்திகள் வெளியானது.

இதற்கான பேச்சுவார்த்தைக் கூட முடிந்த நிலையில் இப்போது கடைசி நேரத்தில் சக்ரா திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய விஷால் முடிவெடுத்துள்ளார்.

 
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி ரூ.250 கோடி வசூலாகியுள்ள நிலையில் மற்ற நடிகர்களும் தங்கள் படங்களை திரையரங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், விஷாலின் சக்ரா படம் வரும் பிப்ரவரி 19-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக நடிகர் விஷால் நேற்று அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெலுங்கு வெர்சனுக்கு சென்சார் இனிமேல் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது சக்ரா படத்தின் டீசர் வெளியிட்டுள்ளது படக்குழு. மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் விஷாலின் மிரட்டலான நடிப்பும்,  யுவன்சங்கர் ராஜாவும் இசையும் இதில் ஜொலிக்கிறது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் நாளை ரிலீசாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாடலை சின்மயி மற்றும் பிரார்த்தனா இந்திரஜித் இணைந்து பாடியுள்ளனர். இந்த அம்மா பாடல் அனைத்து அம்மாக்கள் மற்றும் மகள்களுக்கான நாளை ரிலீசாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட் ஆகும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சக்ரா பட டீசர்  கீழே தரப்பட்டுள்ளது.