செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (17:52 IST)

வசூலில் புதிய சாதனை படைத்த ஆர்.ஆர்.ஆர் படம் !

ஆர் .ஆர்.ஆர் படம்   வெளியான  முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.  இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர். ப்ரமோஷன் பணிகளுக்காகவே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த படம் 25 ஆம் தேதி வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளது.  முதல் நாளன்று  உலகம் முழுவதும்  ரூ.223 கோடி வசூல் செய்துள்ளது.

தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மட்டும் ரூ.120.19 கோடி வசூலித்துள்ளது.   இப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.