திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (15:32 IST)

தமிழகத்தில் மட்டும் இத்தனை திரையரங்குகளா? மாஸ் காட்டிய ஆர் ஆர் ஆர்!

ஆர் ஆர் ஆர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.  இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர். ப்ரமோஷன் பணிகளுக்காகவே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் நாளை மறுநாள் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள நிலையில் ரசிகர்களின் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 550 திரையரங்குகளில் வெளியாகிறதாம். அதிலும் அதிகமாக தெலுங்கு மொழியிலேயே வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழின் முன்னணி நடிகர்கள் படங்கள் இல்லாமல் வேற்று மொழி படம் ஒன்று இத்தனை திரையரங்குகளில் வெளியாவது பரபரப்பாக பேசப்படுகிறது.