திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 27 ஜனவரி 2024 (17:01 IST)

நடிகர் பாபி தியோலின் பிறந்தநாளையொட்டி ''கங்குவா'' படபுதிய போஸ்டர் ரிலீஸ்

kanguva
சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு,  நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா.

இந்த படம். ரூ.350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம்  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

சமீபத்தில்  ‘கங்குவா’ படத்தின் செகண்ட்லுக் போஸ்டரை சூர்யா  வெளியிட்டிருந்தார். இது வரரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், பாலிவுட் சினிமாவில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்து, சமீபத்தில் திரைக்கு வந்த ‘அனிமல்’ படத்தில் கொடூர வில்லனாக  நடித்திருந்த  நடிகர் பாபி தியோல் இப்படத்தில் உதிரன் என்ற கேரக்டரியில் நடித்துள்ளார்.

இப்படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் இன்று ரிலீஸாகியுள்ளது.

இன்று நடிகர் பாபி தியோலின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தில் அவர்  நடித்துள்ள உதிரன் என்ற கதாப்பாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.