வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2024 (08:55 IST)

ரிலீஸுக்கு தயாரான ஜி வி பிரகாஷின் பீரியட் படம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர், ஜெயில், டார்லிங், அடியே, பேச்சிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதுடன் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  சூர்யாவின் அடுத்த படத்துக்கு இசையமைப்பதன் மூலம் 100 படங்களைக் கடந்துள்ளார்.

இந்த நிலையில்,  ஜிவி.பிரகாஷ்குமார்  நடிக்கும் ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு வெளியிட்டார். இப்படத்தை  நிக்கேஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்துள்ள நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜி வி பிரகாஷ் நடித்து முடித்துள்ள பல படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.