ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 அக்டோபர் 2018 (15:14 IST)

தமிழ் சினிமாவிற்கு புது வரவு : ஐ.பிஎல். தொடரை தொகுத்து வழங்கிய சமீர் கோச்சர்...

கடந்த மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எல்.தொடரை தொகுத்து வழங்கிய சமீர் கோச்சர் தற்போது தமிழ்த் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழக்கிய சமீர் திறமையை அறிந்த சில இயக்குநர்கள் அவரை பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.
 
இந்நிலையில் வெட் பிளிக்ஸ் தளத்தில் அவரது நடிப்பில் வெளியான சேக்ரெட் கேம்ஸ் படத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
 
இந்த நிலையில் தமிழில் நடிகை அமலாபால் உடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துவரும் அவர், அதேசமயம் பிரபுதேவாவுடன் மற்றொரு படத்திலும் நடித்துள்ளார்.