1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2017 (13:43 IST)

பிக் பாஸ் வீட்டில் புதிய பிரபலம்: அதிரடியாக நுழையும் நடிகை சுஜா வரூணி?

பிக் பாஸ் வீட்டில் புதிய பிரபலம்: அதிரடியாக நுழையும் நடிகை சுஜா வரூணி?

பிக் பாஸ் வீட்டில் நடிகை பிந்து மாதவியை தொடர்ந்து புதிய நடிகை ஒருவரை களம் இறக்கியுள்ளனர் நிகழ்ச்சியை நடத்துபவர்கள். இது தொடர்பான புரோமோ வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.


 
 
நடிகை ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி அப்படியே படுத்துவிட்டது. ஓவியா ரசிகர்களின் புறக்கணிப்பால் டிஆர்பி ரேட்டும் குறைந்து விட்டது. இதனால் ஓவியாவை மீண்டும் கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அது நடக்குமா என்பது கேள்விக்குறி தான்.
 
படுத்துவிட்ட நிகழ்ச்சியை எப்படியாவது தூக்கி நிறுத்த வேண்டும் என புது புது டாஸ்க் கொடுத்து பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் எதுவும் பயனளிக்காமல் மொக்கையாகத்தான் போகிறது. இந்நிலையில் புதிய போட்டியாளர் ஒருவரை வீட்டிற்குள் அனுப்பி நிகழ்ச்சியை மீண்டும் சூடுபிடிக்க வைக்க சூடான நடிகை ஒருவரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பியுள்ளார்கள்.

 

 
 
புதிதாக வரும் அந்த பிரபலம் நடிகை பூஜா வரூணி என கூறப்படுகிறது. மேலிருந்து ரோப் மூலமாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் அவரின் எண்ட்ரியே மாஸாக உள்ளது. இவருடைய வரவு படுத்துவிட்ட நிகழ்ச்சியை தூக்கி நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.