வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:44 IST)

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் விவரம்

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு  தலைவராக ரவிவர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



அண்மையில் சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு  தேர்தல் நடந்தது.  இதில் 4 அணிகள் போட்டியிட்டன. லியாகத் அலிகான், தம்பித்துரை ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்தினார்கள்.
 
இந்த தேர்தலில்  தலைவராக ரவிவர்மா தேர்வாகி உள்ளார். ஆடுகளம் நரேன் செயலாளராகவும் ஜெயந்த் பொருளாளராகவும் மனோபாலா, ராஜ்காந்த் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் அசோக் சாமுவேல், மோகன், விஜய் ஆனந்த், கற்பகவள்ளி ஆகியோர் இணை செயலாளர்களாகவும் தேர்வானார்கள்.
 
செயற்குழு உறுப்பினர்களாக ரவி சங்கர், பிர்லா, சதிஷ், வெங்கட் கிருஷ்ணன், ஈஸ்வர் ரகுநாதன், சின்னி ஜெயந்த், ரிஷி, டி.பி. கஜேந்திரன், வைரமணி, ஸ்ரீதேவி, சிவகவிதா, நீபா, தீபாஸ்ரீ, ஆர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர்.