திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (09:51 IST)

நிலைமை கைமீறி சென்றுவிட்டது…. மோடிக்கு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பதில்!

சமீபத்தில் பிரதமர் மோடி பாஜகவினருக்கு தெரிவித்திருந்த அறிவுரை பற்றி அனுராக் காஷ்யப் பதிலளித்துள்ளார்.

சமீபகாலமாக வட இந்தியாவில் பாலிவுட் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு அலை உருவாகி வருகிறது. பல படங்களை பாய்காட் செய்ய சொல்லி ஹேஷ்டேக்குகள் பரப்பப்பட்டன. இதன் பின்னால் பாஜகவினரும் உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இது பற்றி சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது. அவரது பேச்சில் “திரைப்பட சர்ச்சைகள் குறித்து பாஜக தலைவர்கள் பேசுவதால் அரசின் திட்டங்கள் மக்களிடையே சென்றடையாமல் இருப்பதாகவும், தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் இந்த சர்ச்சையே ஒளிபரப்பாகி வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு 400 நாட்களே உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களின் உழைப்பை வீணடிக்கும் வகையில் இந்த வீண் விவாதம் உள்ளது” எனக் கூறியிருந்தார்.

இது பற்றி சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பேசும்போது “இதே வார்த்தைகளை பிரதமர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பேசியிருந்தால் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் இப்போது நிலைமை கைமீறி போய்விட்டது. வெறுப்பௌ ஊக்கப்படுத்தியதால் உருவான கூட்டம் இன்று மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறிவிட்டது” எனக் கூறியுள்ளார்.